குறிப்பாக நாகை , திருவாரூர், மயிலாடுதுறை,கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று காலை முதலே பரவலாக கன மழை பெய்து வருகிறது.
குறிப்பாக நாகை, கீழ்வேளூர், காக்கழனி வேளாங்கண்ணி, திருப்பூண்டி, கீழையூர், திருக்குவளை, வலிவலம், நாகூர், திருமருகல், திட்டச்சேரி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி உள் கிராமங்களிலும் விடிய விடிய கன மழை கொட்டி தீர்த்து வருகிறது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் நாகப்பட்டினத்தில் 111.20 மி.மீ (11.1செ.மீ), கீழ்வேலூரில் 118.35மி.மீ(11.8செ.மீ, திருக்குவளையில் 35.30(3.5செ.மீ), வேதாரண்யத்தில் 87.06(8.7செ.மீ) மழை பதிவாகியுள்ளது.