அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! கனமழைக்கு வாய்ப்பு..!
சனி, 30 செப்டம்பர் 2023 (10:24 IST)
அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக இருப்பதால் கடலோர பகுதிகளில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு அரபி கடலில் கோவா கடற்கரை பகுதியில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி சில மணி நேரங்களுக்கு முன் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.
இதனை அடுத்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே அரபிக்கடல் ஓரத்தில் உள்ள கடற்கரை நகரங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே கடந்த சில நாட்களாக தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.