கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து விலை உயர்ந்து வரும் நிலையில் இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
சர்வதேச அளவில் தங்கம் மீதான முதலீடு அதிகரிக்கத் தொடங்கியது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த சில மாதங்களுக்குள் தங்கம் தொடர்ந்து பல ஆயிரங்களில் விலை உயர்ந்து வருகிறது. நேற்று முன் தினம் வரை 22 காரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.85,120 ஆக விற்பனையாகி வந்த நிலையில் நேற்று ரூ.1040 உயர்ந்து ரூ.86,160 என்ற புதிய உச்சத்தைத் தொட்டது.
இந்நிலையில் இன்று மீண்டும் சவரனுக்கு ரூ720 உயர்ந்து மீண்டும் புதிய உச்சத்தை இரண்டாவது நாளாக தொட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி சவரன் ரூ.720 உயர்ந்து ரூ.86,880 ஆகவும், ஒரு கிராம் ரூ.90 உயர்ந்து ரூ.10,860 ஆகவும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.161 ஆகவும், ஒரு கிலோ ரூ.1,61,000 ஆகவும் விற்பனையாகி வருகிறது.
Edit by Prasanth.K