கரையை நோக்கி நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு: 22 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

Webdunia
ஞாயிறு, 25 டிசம்பர் 2022 (12:15 IST)
வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி கரையை நோக்கி நடந்து வரும் நிலையில் 22 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 
 
வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையை நோக்கி தற்போது நகர்ந்து வருகிறது என்றும் குறிப்பாக திரிகோணமலை அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அந்நாட்டுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் இலங்கையை நோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்தாலும் தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு விழுப்புரம் கடலூர் வேலூர் திருப்பத்தூர் உட்பட 22 மாவட்டங்களில் இன்னும் ஒரு சில மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என்றும் சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னையில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருவதையடுத்து சாலைகளில் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்