நாகையை நோக்கி நகர்ந்து வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: எப்போது கரையை கடக்கும்?

ஞாயிறு, 25 டிசம்பர் 2022 (08:56 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியது என்பது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று கரையை நோக்கி நடந்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது
 
இந்த நிலையில் தென் மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகையில் இருந்து 330 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது அது 8 கிலோமீட்டர் வேகமாக குறைந்துள்ளதாகவும் இன்னும் ஓரிரு நாளில் இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என்றும் குறிப்பிடப்படுகிறது 
 
இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்