இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை: வானிலை அறிக்கை..!

Webdunia
திங்கள், 3 ஜூலை 2023 (07:15 IST)
சென்னை உள்பட தமிழக முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் இன்று 16 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் தெரிவித்துள்ளது. 
 
ஏற்கனவே சென்னையில் இன்று அதிகாலை லேசான மழை பெய்து வரும் நிலையில் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 16 மாவட்டங்களில்  கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 
 
குறிப்பாக  நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும் என்று கூறப்பட்டு இருப்பதை அடுத்து நீலகிரி மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
சென்னையில் தற்போது விட்டு விட்டு மிதமான மழை பெய்து வரும் நிலையில் இன்று மாலைக்குள் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கோவையிலும் இன்று மிக கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
 
Edited by siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்