இன்று 13 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Siva

திங்கள், 27 அக்டோபர் 2025 (08:04 IST)
தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களில் இன்று மிதமான மழை முதல் கன மழை வர பெய்யும் என வானிலை ஆய்வு மையம் சற்று முன் அறிவிப்பு வழியே உள்ளது எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கோவை, கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராணிப்பேட்டை, நீலகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று மழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்