வங்கக்கடலில் உருவாகும் புயல்.. கரையை கடப்பது எங்கே? எப்போது?

Webdunia
வெள்ளி, 17 நவம்பர் 2023 (07:42 IST)
வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக மாற வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.  இந்த புயல் வங்கதேசம் அருகே நாளை அதிகாலை கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

புயல் காரணமாக மட்டுமின்றி வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் தமிழ்நாடு புதுச்சேரியில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ஐந்து மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் மட்டும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்