டெல்லியில் உள்ள வங்கி வாடிக்கையாளர் கணக்கில் திடீரென 820 கோடி ரூபாய் தவறாக டெபாசிட் செய்யப்பட்டதை அடுத்து வங்கி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்து பணத்தை மீட்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
டெல்லியில் உள்ள யூகோ வங்கியின் வாடிக்கையாளர் ஒருவர் கணக்கில் தவறுதலாக 820 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டது. அதன் பிறகு வங்கி நிர்வாகிகள் சுதாரித்து உடனடியாக 79 சதவீதம் பணத்தை அதாவது 649 கோடி பணத்தை ஐஎம்பிஎஸ் எனப்படும் உடனடியாக செலுத்தும் சேவை மூலம் திரும்ப பெற்று விட்டனர்.
ஆனால் மீதமுள்ள 31 சதவீத பணத்தை அதாவது ரூ.171 கோடியை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வங்கி நிர்வாகம் கூறியுள்ளது. இந்த நிலையில் இந்த தவறு நடந்தது தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவா? அல்லது மனித பிழையா? என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் ஒருவேளை ஹேக்கிங் முயற்சி ஆக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.