தொடர் கனமழை எதிரொலி: புதுச்சேரியில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை!

புதன், 15 நவம்பர் 2023 (15:56 IST)
தமிழகத்தை போலவே புதுவையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் அங்கு 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.  

வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளதை அடுத்து தமிழ்நாடு பாண்டிச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் புதுச்சேரியில் நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக கன மழை பெய்து வரும் நிலையில்  மீண்டும் இன்று மதியம் கனமழை தொடங்கியுள்ளது. இதனை அடுத்து புதுவை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.  

நேற்று தோன்றிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது ஒரிசா கடற்கரை நோக்கி நகரும் என்று கூறப்படும் நிலையில் இது புயலாக மாறுமா என்பது நாளை தெரியவரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்