தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் வெயில் அதிகரிக்கும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Siva
செவ்வாய், 28 மே 2024 (06:35 IST)
தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்கள் வெயில் அதிகரிக்கும் என்றும் இயல்பான வெப்பநிலையை விட அதிக வெப்பநிலை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த சில நாட்களாக வங்க கடலில் உருவான புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலான மழை பெய்த நிலையில் நேற்று புயல் கரையை கடந்தது. இந்த நிலையில் இன்று முதல் தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கும் என்றும் அக்னி நட்சத்திரம்  இன்றுடன் முடிவடைந்தால் கூடுதலான வெப்பம் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
தமிழக மற்றும் புதுவையில் கோடை வெயில் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியதை அச்சத்துடன் பொதுமக்கள் பார்க்கத் தொடங்கியுள்ளனர். இருப்பினும் வளிமண்டல கீழடுக்கில் வடமேற்கு மற்றும் மேற்கு திசையில் காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் ஜூன் இரண்டாம் தேதி வரை தமிழகத்தின் சில இடங்களிலும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
ஆனால் அதே நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய பகுதிகளில் வெப்ப காற்று வீசும் என்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் இனி மழையை எதிர்பார்க்க முடியாது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்