மாஸ்க் போடலைனா உடனே அபராதம் போடுங்க..! – ஸ்ட்ரிக்ட் காட்டும் அரசு!

Webdunia
திங்கள், 3 ஜனவரி 2022 (10:52 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் மாஸ்க் அணிவதை கட்டாயமாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களில் தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வந்திருந்த நிலையில் பாதிப்புகளும் குறைந்தன. இந்நிலையில் தற்போது டெல்டா, ஒமிக்ரான் இருவகை வேரியண்டுகளும் வேகமாக பரவி வருவதால் மீண்டும் பாதிப்புகள் அதிகரித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு மீண்டும் பல கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது.

மேலும் மக்கள் பொது இடங்களில் மாஸ்க் அணிவதை தமிழக அரசு தீவிரமாக வலியுறுத்தி வருகிறது. ஆனாலும் பலர் மாஸ்க் அணிவதை தவிர்த்து அலட்சியம் காட்டுவதும் தொடர்கிறது. கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் என்ற நடவடிக்கை தொடர்கிறது.

இந்நிலையில் மாஸ்க் அணிவதை கட்டாயமாக்கும் வகையில் பேசியுள்ள சுகாதாரத்துறை தலைமை செயலர் ராதாகிருஷ்ணன், பொதுவெளியில் மாஸ்க் அணியாமல் செல்பவர்களுக்கு யோசிக்காமல் அபராதம் விதியுங்கள். மாஸ்க் அணிவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவே அபராதம் என்பதை புரிய வைக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனால் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் என்ற நடைமுறை தீவிரப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்