சென்னை கலாஷேத்ரா கல்லூரி ஹரிபத்மனுக்கு ஜாமின் கிடைக்குமா?

திங்கள், 10 ஏப்ரல் 2023 (18:47 IST)
சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் பணிபுரிந்த உதவி பேராசிரியர் ஹரிபத்மன் ஜாமீன் மனு தாக்கல் செய்து உள்ள நிலையில் இந்த மனு நாளை விசாரணைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன
 
சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் புகாருக்கு உள்ளான உதவி பேராசிரியர் ஹரி பத்மன் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து அவரது மனைவி தனது கணவர் நிரபராதி என்றும் அவர் மேல் இரண்டு பெண் பேராசிரியர்கள் பொறாமையின் பெயரால் மாணவியை தூண்டிவிட்டு குற்றம் சாட்டி உள்ளனர் என்றும் தெரிவித்திருந்தார். 
 
இந்த நிலையில் கைதான உதவி பேராசிரியர் ஹரி பத்மன் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து புகார் தாரரான முன்னாள் மனைவி எதிர்மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்ட நிலையில் நாளை இந்த மனு மீது விசாரணை நடக்கும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 
நாளை ஹரிபத்மனுக்கு  ஜாமீன் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்