பாரதிக்கு கருப்பு கலருல முண்டாசு... இது ஓகே வா மிஸ்டர் எச்.ராஜா சார்!!

Webdunia
புதன், 5 ஜூன் 2019 (10:22 IST)
கற்பனையாக ஓவியர் வரைந்த தலைப்பாகை எந்த நிறத்தில் இருந்தால் என்ன? என கேட்டு எச்.ராஜா வழக்கம் போல் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளார். 
 
பாஜகவின் அடிமை அரசாக இருக்கும் அதிமுக, பாடநூல்களிலும் காவியை புகுத்தி வருவதாகவும், பள்ளி மாணவர்களிடையேயும் காவியை புகுத்தி வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் அரசின் பாடநூல் அட்டையில் உள்ள பாரதியாரின் தலைப்பாகை நிறத்தை கையில் எடுத்துள்ள கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
 
இந்நிலையில் இதற்கு பாஜக தலைவர் எச்.ராஜா, பாரதிக்கு தலைப்பாகையே ஓவியர் வரைந்ததுதான். அவரது இயல்பான புகைப்படம் காரைக்குடி இந்து மதாபிமான சங்கத்தில் இன்றும் உள்ளது. கற்பனையாக ஓவியர் வரைந்த தலைப்பாகை எந்த நிறத்தில் இருந்தால் என்ன? என கேட்டுள்ளார். 
இதை கண்ட இணையவாசிகள், தலைப்பாகை காவி கலரில் இருப்பதால் பிரச்சனை இல்லை என கூறியிருக்கிறீர்கள். அதுவே தலைப்பாகை கருப்பு நிறத்தில் இருந்தால் இப்படி பேசியிருப்பீர்களா? என பதிலுக்கு கேட்டுள்ளனர். 
 
ஆனால், அந்த படத்தை வடிவமைத்த டிசைனர், பாரதியாரின் தலைப்பாகை நிறம் தேசியக் கொடியை பிரதிபலிக்கும் விதமாகவே உருவாக்கியதாகவும், அதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்