தீபாவின் பாதுகாப்பு அரண் நான் - அடம் பிடிக்கும் டிரைவர் ராஜா

சனி, 22 செப்டம்பர் 2018 (15:38 IST)
தீபாவின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவருக்கு நான் பாதுகாப்பு அரணாக இருக்க அனுமதிக்க வேண்டும் என கட்சியில் இருந்து நீக்கப்பட்ட டிரைவர் ராஜா புகார் அளித்துள்ளார்.
ஜெ.வின் மறைவிற்கு பின் புதிய அரசியல் கட்சியை தொடங்கிய ஜெ.வின் அண்னன் மகள் தீபா, அதற்கு எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை என பெயர் வைத்தார். தீபாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்த அவரின் கணவர் மாதவன் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா திமுக என்கிற கட்சியை தொடங்கி அதிர வைத்தார். 
 
தீபாவின் கார் டிரைவர் ராஜா கட்சியின் மாநில செயலாளராக வலம் வந்தார். அவர் மேல் மோசடி புகார்கள் கொடுக்கப்பட்டது. எனவே, கடந்த ஜனவரி மாதம் அவரை கட்சியிலிருந்து தீபா நீக்கினார். அதன்பின்பு மீண்டும் அவர் கட்சியில் இணைக்கப்பட்டார்.
 
சமீபத்தில் மீண்டும் ராஜாவை கட்சியிலிருந்து தீபா நீக்கி உத்தரவிட்டார்.
இந்நிலையில் ராஜா சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்திற்கு சென்று ஒரு புகார் அளித்திருக்கிறார். அதில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையில் மாநில செயலாளராக இருந்து வரும் நான் தீபாவின் குடும்ப நண்பர் என்ற முறையில் அவருக்கு பாதுகாப்பாக இருந்து வருகிறேன். ஆனால் என் மீது சிலர் அபாண்டமாக ஊழல் புகார் கூறுகின்றனர். அவை அனைத்தும் பொய். என்னை சிலர் கொல்ல திட்டமிட்டிருக்கிறார்கள்.
 
தீபாவிற்கு சசிகலா, தினகரனால் ஆபத்து இருக்கிறது. ஆகவே எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும் தீபாவிற்கு பாதுகாப்பு அரணாக இருக்க விரும்புகிறேன். அதற்கு உதவ வேண்டும் என ராஜா தனது மனுவில் கூறியிருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்