12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: சாதனை படைத்த அரசுப்பள்ளிகள்!

Webdunia
திங்கள், 8 மே 2023 (11:08 IST)
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் மாணவ மாணவிகள் ஆன்லைன் மூலம் +2 தேர்வு முடிவுகளை பார்த்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் இந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்கள் பிளஸ் டூ பொதுத்தேர்வில் சாதனை படைத்துள்ள தகவல் பெறும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
12ம் வகுப்பு பொது தேர்வில் 326 மேல்நிலைப் பள்ளிகளில் நூற்றுக்கு நூறு சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது அசத்தலான ஒன்றாக பார்க்கப்படுகிறது. 
மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகள் 89.80 சதவீதம் மாணவர்களும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95.99% மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 
 
தனியார் பள்ளிகளில் 99 சைபர் எட்டு சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்