பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: 2 பேர் மட்டும் தமிழ் மொழியில் சதம்!

திங்கள், 8 மே 2023 (11:00 IST)
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியான நிலையில் தமிழில் இரண்டு பேர்கள் மட்டுமே நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்கியுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளன. 
 
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியாகிய நிலையில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தேர்வு முடிவுகளை பார்த்து வருகின்றனர். இன்று காலை 9:30 மணிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு முடிவுகளை வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அமைச்சர் காலதாமதமாக வந்ததால் 10 15 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியானது 
 
இந்த நிலையில் பிளஸ் டூ தேர்வு முடிவுகளில் 690 பேர் கணித பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்துள்ள நிலையில் இரண்டே இரண்டு பேர் மட்டுமே தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் பிளஸ் டூ தேர்வு தேர்ச்சி விகிதம் குறித்த தகவலை தற்போது பார்ப்போம்
 
தேர்ச்சி பெற்றவர்கள் : 7,55,451 (94.03%)
 
மாணவியர்  : 96.38% 
 
மாணவர்கள்  : 91.45%
 
சிறைவாசிகள்  : 79 பேர் 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்