இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வந்த நிலையில் இரண்டு வாரங்களாகக் குறைந்து வருகிறது.
அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், அனைத்து மாநிலங்களிலும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் கூறியபடி 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இதன்படி ஸ்மார் போனில் கோவின் செயலியின் முன்பதிவு செய்தால்தான் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியும் என்ற விதி தற்போது மாற்றப்பட்டுள்ளது. அதாவது, முன்பதிவு, ஆதார் உள்ளிட்ட எந்தவொரு ஆதாரம் இல்லாமலேயே தடுப்பூசி மையங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளது.