அடுத்த 3 நாட்களுக்குள் 47 லட்சம் தடுப்பூசி - மத்திய அரசு

வெள்ளி, 25 ஜூன் 2021 (11:41 IST)
அடுத்த 3 நாட்களுக்கு மாநிலங்களுக்கு 47 லட்சம் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது என மத்திய  சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.
 
அடுத்த 3 நாட்களுக்கு மாநிலங்களுக்கு 47 லட்சம் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. இதுவரை 30.54 கோடி தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டதில் 29.04 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்போது 1.50 கோடி தடுப்பூசிகள் மாநிலங்களிடம் இருப்பு உள்ளது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தியா முழுவதும் 30,79,48,744 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்