அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1 முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும்- தமிழக அரசு

Webdunia
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (21:23 IST)
அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தப்படும் என நேற்று சுதந்திர தின உரையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கூறிய நிலையில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஜூலை 1ஆம் தேதி முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது
 
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது
 
தமிழக முதலமைச்சர் 75-வது சுதந்திர தின உரையில், மத்திய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிடும் கோரிக்கையை ஏற்று, கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும் மாநில அரசு ஊழியர்கள்/ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 01.07.2022 முதல் அகவிலைப்படியை 31 விழுக்காட்டிலிருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்திருந்தார். 
 
இந்த அறிவிப்பின்படி தலைமைச் செயலளாளர் முதல் கடைநிலை ஊழியர் வரை அனைத்து தமிழ்நாடு அரசின் ஊழியர்களுக்கும் இந்த அகவிலைப்படி 01.07.2022 முதலே உயர்த்தி வழங்கப்படும். இதற்கான அரசாணைகள் விரைவில் தனித்தனியே வெளியிடப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்