செய்தியாளர்கள் சந்திப்பு அரசு ஏற்பாடுதான் - லண்டன் மருத்துவர்; மறுத்த உள்ளூர் மருத்துவர்கள்

Webdunia
திங்கள், 6 பிப்ரவரி 2017 (17:04 IST)
ஜெயலலிதா சிகிச்சை குறித்து செய்தியாளர்களின் சந்திப்பை தமிழக அரசு தான் ஏற்பாடு செய்தது என்று லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே கூறினார். இந்த செய்தியாளர்கள் சந்திப்புக்கும் அரசுக்கும் எந்த தொடப்பும் இல்லை என்று அப்பல்லோ மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்தனர்.


 


ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும், அவரது மரணம் குறித்தும் பரவிய வதந்தியை போக்க, லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே உடன் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைப்பெற்றது.

பொதுமக்கள் ஜெயலலிதா மரணம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பியபோது, தகவல்களை வெளியிடாத அப்பல்லோ மருத்துவமனை திடீரென செய்தியாளர்கள் சந்திப்பு வைத்தது ஏன்? என்ற கேள்வி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பு ஏற்பாடு அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தமிழக முதல்வராக அறிவிக்கப்பட்ட பின்னர் தான் நடைப்பெறுகிறது. தமிழக மக்களுக்கு சசிகலா மீது வெறுப்பு ஏற்பட காரணம் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் தான். தற்போது அதை போக்கவே இந்த செய்தியாளர்கள் சந்திப்பு என சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அடுத்த கட்டுரையில்