டெல்லி பயணம் நிறைவு.. சென்னை திரும்பிய ஆளுனரின் அடுத்த நடவடிக்கை என்ன?

Webdunia
வியாழன், 13 ஜூலை 2023 (09:58 IST)
தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லி சென்று இருந்த நிலையில் அவர் டெல்லி பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
டெல்லி பயணத்தின் போது அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை சந்தித்து தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. 
 
அதேபோல் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரை சந்தித்து செந்தில் பாலாஜி அமைச்சர் பதவி நீக்கம் குறித்து ஆலோசனை செய்ததாகவும் கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் டெல்லி பயணத்தை முடித்துவிட்டு தமிழகம் திரும்பி உள்ள ஆளுநர் ஆர் என் ரவி அவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்