ஆன்லைன் சூதாட்ட மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுனர்.. அமைச்சர் ரகுபதி அதிருப்தி..!

Webdunia
வியாழன், 9 மார்ச் 2023 (07:21 IST)
ஆன்லைன் சூதாட்டம் மசோதாவை ஆளுநர் ரவி திருப்பி அனுப்பிய நிலையில் இது குறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். 
 
ஆன்லைன் சூதாட்டம் காரணமாக கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் உள்ள பலர் தற்கொலை செய்து வருகின்றனர் என்பதும் இதனை அடுத்து சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு கடந்த அக்டோபர் மாதம் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்த மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்காத நிலையில் தற்போது அந்த மசோதாவை சில விளக்கங்கள் கேட்டு திருப்பி அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு நான்கு மாதங்கள் கடந்த நிலையில் தற்போது விளக்கம் கேட்டிருப்பது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 
 
இது குறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்கள் கூறிய போது ஆளுநர் ரவி திருப்பி அனுப்பிய ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றினால் அதற்கு அவர் ஒப்புதல் தந்தாக வேண்டும் என்றும் அதுதான் சட்டம் என்றோம் ஆனால் ஆளுநர் எப்படி நிராகரித்தார் என்று தெரியவில்லை என்றும் கூறியுள்ளார். 
 
இதற்கு ஆளுநர் தரப்பில் விளக்கம் அளித்த போது ஆன்லைன் தடை சட்ட மசோதா இரண்டாவது முறையாக திருப்பி அனுப்பப்படவில்லை என்றும் இதன் முதல் முறை தான் என்றும் இதற்கு முன்பாக இந்த சட்டம் தொடர்பாக சில விளக்கங்கள் மட்டுமே கேட்டு அனுப்பியதாகவும் கூறப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்