தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டு குழு கரூரில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வதற்க்காக பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாச்சலம் தலைமையில் வந்திருந்தனர்.இக்குழுவில் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.ராஜேந்திரன்., பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி., பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் நடராஜன்., மதுரை மேலூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வம்., அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் மோகன், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா., தமிழக சட்ட பேரவை செயலாளர் சீனிவாசன், துணை செயலாளர் சிவகுமார் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கரூரை அடுத்த கடம்பங்குறிச்சி. மண்மங்கலம்., ஆண்டாங்கோவில் புதூர்.
கரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை போன்றவற்றை கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் ஆய்வை மேற்கொண்டனர். இதில் வேளாண்துறை மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த ஆய்வு குழு தலைவர் வெங்கடாஜலம்ää தமிழக அரசு ஏற்கனவே குடிமராமத்து திட்டத்தின் கீழ் நீர் நிலைகளை தூர் வாரி இன்று தண்ணீரை சேமித்து விவசாயிகளின் வாழ்க்கை தரம் உயர வழி வகுத்துள்ளது.
அதே போல் இன்று கழிவ10 நீர் மேலாண்மையில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதால் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு ஏற்றாட்போல் பல்வேறு திட்டங்களின் வாயிலாக கழிவுநீர் மேலாண்மையை சிறப்பாக கையாண்டு வருகிறோம்.கரூர் மாவட்டத்தில் இன்று ஆய்வு பணிகளை மேற்கொண்டதின் வாயிலாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு இன்று வெகு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றார்.