இ பதிவில் மாற்றம்...தமிழக அரசு அரசாணை வெளியீடு

Webdunia
திங்கள், 24 மே 2021 (21:04 IST)
இ-பதிவு முறையில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை தமிழக அரசு  அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளொன்றுக்கு 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டுவரும் நிலையில், சமீபத்தில் புதிய வகை நோய்த்தாக கருப்பு பூஞ்ஞை தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.

இதைத்தடுக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில்,  தமிழ் சினிமா நடிகர்கள்  மக்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணவு ஏற்படுத்தி வருகின்றனர்.

எனவே, இந்தக் கொரொனா பரவலைத் தடுக்க அரசு வரும் மே மாதம் 31 ஆம் தேதிவரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது.

இ- பாஸில் சில மாற்றங்கள் குறித்து, திமுகவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதில், மே 25 ஆம் தேதி முதல் தொழிற்சாலை பணியாளர்கள், இருசக்கர வாகனங்களில் செல்லக்கூடாது. தொழிற்சாலைகளில் வாகனங்கள் இ பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும், தொழிற்சாலைகளில் பணியாற்றுவோரை அழைத்துச் செல்ல இ –பாஸ் பெற்றிருந்தால் மட்டுமே அழைத்து வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இரு சக்கரவாகனங்களைப் பயன்படுத்தாமல், 4 சக்கர வாகனங்களை நிறுவனங்கள் ஏற்படுத்திக் கொடுக்கவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.  அதேபோல் அத்தியாவசிய பொருட்கள்  தயாரிக்கின்ற ஆலைகள் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  

இதுதான் இபாஸில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகள் ஆகும். இதனால் தொழிலாளர்கள் பயனடைவார்கள் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்