5 கிலோ எடை கொண்ட குழந்தையை பிரசவித்து சாதனை

Webdunia
வியாழன், 15 செப்டம்பர் 2016 (01:52 IST)
சென்னையைச் சேர்ந்த பெண்ணுக்கு 5 கிலோ எடைகொண்ட குழந்தையை சுகப்பிரசவம் மூலம் பிரசவித்து அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
 

 
சென்னை வேப்பேரியைச் சேர்ந்த திருமதி. கல்பனா என்பவர், 2-வது பிரசவத்திற்காக, சென்னை அரசு கஸ்தூரிபாய் காந்தி தாய் - சேய் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது வயிற்றில் இருந்த குழந்தை, சராசரி எடையைவிடவும் அதிக எடை கொண்டதாக இருந்துள்ளது.
 
இருந்த போதிலும், அரசு மருத்துவர்களின் சிறப்பான கண்காணிப்பில், சுமார் 5 கிலோ எடை கொண்ட பெண் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்துள்ளது.
 
பொதுவாக இதுபோன்ற தருணங்களில், குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படும் என்பதால், சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் நிலையில், அதுபோன்ற அறுவை சிகிச்சை இல்லாமல் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அடுத்த கட்டுரையில்