திருவண்ணாமலையில் அரசுப் பேருந்தும்,லாரியும் மோதி விபத்து! 2 பேர் பலி

Webdunia
ஞாயிறு, 4 டிசம்பர் 2022 (13:39 IST)
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருத்த பக்கிரிபாளையம் பகுதியில் அரசு பேருந்தும், லாரியும் மோதிக்கொண்ட சம்பவத்தில், 30 க்கும் மேற்பட்டோர் படுகயாம் அடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருத்த பக்கிரிபாளையம் பகுதியில் வந்த அரசுப் பேருந்தும், லாரியும் நேருக்கு நேரில் மோதி விபத்தில்,  அரசுப் பேருந்து ஓட்டுனர் உள்ளிட்ட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து நடந்த காரணம் பற்றி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.  இந்த விபத்து அப்பகுதியில், பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்