சென்னையில் தொப்பை போலீசுகளுக்கு குட்பை

Webdunia
புதன், 8 ஜூன் 2016 (16:11 IST)
சென்னை மாநகர காவல் துறையில் பணியாற்றும் காவல் துறையினர்களுக்கு வாரம் தோறும் யோகா பயிற்சி அளிக்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.


 

 
உடல் ஆரோக்கியத்தை இழந்து வரும் காவல் துறையினர்களுக்கு மன உளைச்சலும் அதிகம். இதனால் சென்னை மாநகர காவல் துறையினர்களுக்கு வாரம் தோறும் யோகா பயிற்சி அளிக்கும் திட்டத்தை காவல்துறை ஆணையர் டி.கே.ராஜேந்திரன் துவக்கியுள்ளார்.
 
யோகா கலையில் சிறந்து விளங்கும் பயிற்சியாளர்களை கொண்டு எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நேற்று காலை 6 மணிக்கு தொடங்கியது. இதில் முதற்கட்டமாக அயுதப்படை மற்றும் போக்குவரத்து பிரிவு காவல் துறையினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
 
காவல் துறையினர் தினமும் யோகா பயிற்சி நடத்த கோரிக்கை விடுத்துள்ளனர். இருந்தாலும் நடைமுறை சிக்கல் காரணமாக வாரம் தோறும் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் காவல் துறையினர், யோகா பயிற்சி தங்களுக்கு புத்துணர்வு அளித்துள்ளதாகவும், விரைவில் தொப்பைக்கும், மன உளைச்சலுக்கும் குட்பை சொல்லிவிடுவோம் என்று தெரிவித்துள்ளனர். 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்