நிச்சயம் நல்ல முடிவு எடுப்பேன்: மாஃபா. பாண்டியராஜன் ட்வீட்!

Webdunia
சனி, 11 பிப்ரவரி 2017 (11:41 IST)
நிச்சயமாக வாக்களித்த மக்களின் குரலுக்கு செவிமடுப்பேன் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன்  ட்வீட் செய்துள்ளார்.

 
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 'மாஃபா' பாண்டியராஜன் தொடர்ந்து சின்னம்மா சசிகலா தான் முதல்வராக வர  வேண்டும் என ஆதரவு தந்து வருகிறார். மேலும் ஆளுநரை சந்திக்க சசிகலாவுடன் சென்று வந்துள்ளார். கட்சிக்குள் பிளவு  ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். பன்னீர்செல்வம் கருத்தில் உண்மை இல்லை. பன்னீர்செல்வத்தை மீறி எந்த முடிவும் எடுக்கவில்லை. பன்னீர்செல்வத்துக்கு அழுத்தம் கொடுக்கப்படவில்லை. அனைத்து முடிவுகளுக்கும் உடன்  இருந்துவிட்டு தற்போது மாற்றி பேசுவது போலித்தனம் என்றெல்லாம் கூறிய நிலையில் தற்போது இவ்வாறு ட்வீட் செய்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 
இந்நிலையில் மாஃபா. பாண்டியராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், 'தொகுதி மக்களின் கருத்துகளை கேட்டு நல்ல முடிவு  எடுப்பேன். அம்மாவின் பெருமையை நிலைநிறுத்தும் வகையிலும், அதிமுக-க்கு பங்கம் வராத வகையில், மீண்டும் ஒன்றிணைக்கும் வகையிலும், நல்ல முடிவு எடுப்பேன்' எனக்கூறியுள்ளார். மேலும் நிச்சயமாக வாக்களித்த மக்களின் குரலுக்கு மதிப்பு கொடுத்து செவிமடுப்பேன் என கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்