தமிழகத்தில் மறு தேர்தலை நடத்துவது நல்லது என இயக்குனரும் நடிகருமான ஆர்.பார்த்திபன் கருத்து தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு சென்னை மெரினா கடற்கரைக்கு சென்று, ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் சமாதிகள் அருகே, சில நேரம் செலவிட்டார். அதன்பின், அந்த புகைப்படத்தை தன்னுடைய முகநூலில் பதிவிட்டு அவர் சில கருத்துகளை பதிவிட்டுள்ளார்.
முதன்முறையாக ... மறைந்த முதல்வர் சமாதிக்கு சென்றேன்.
தியானிக்க அல்ல... ஜீரணிக்க !
மரணத்தின் மர்மம், மூன்ரெழுத்துக்காரரின் 75 நாள் மௌனத்தின் மாமர்மம்,
அரசியல் அதர்மங்கள், ரிசார்ட்டில் Mla-க்கள், ரிமோட்டாய் கோடிகள், நடப்பவை நடந்தவை....
விளங்காமல் கலங்கரை விளக்கத்திலிருந்து நடந்து சென்றேன்.