41 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை! – அதிர்ச்சியில் மக்கள்!

Webdunia
வியாழன், 30 ஜூலை 2020 (11:17 IST)
நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வரும் தங்கம் விலை தற்போது 41 ஆயிரத்தை நெருங்கியுள்ள செய்தி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே உச்சத்தில் இருந்து வரும் நிலையில் தற்போது ஆடி மாதம் வந்துள்ளதால் விலை குறையும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்ப்பார்ப்பை தவிடுபொடி ஆக்கும் வகையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.224 உயர்ந்து ரூ.40,824 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.28 அதிகரித்து ரூ.5,103 ஆக விற்பனையாகி வருகிறது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 60 காசுகள் குறைந்து ரூ.71.20 க்கு விற்பனையாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்