அட்சய திருதியை டிமாண்ட்.. ஒரே நாளில் 2வது முறையாக உயர்ந்த தங்கம் விலை!

Prasanth Karthick

வெள்ளி, 10 மே 2024 (09:15 IST)
இன்று அட்சய திருதியையில் தங்கம் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில் தங்கம் விலை காலையிலேயே விலை உயர்ந்த நிலையில் சில மணி நேரங்களில் மீண்டும் விலை உயர்ந்துள்ளது.



கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை அதிகமாக ஏற்றத்தை கண்டு வந்தது. சில நாட்களில் தங்கம் விலை சற்று குறைந்தாலும் சில மாதங்களுக்கு முன்னர் விற்ற விலையை ஒப்பிடும்போது அதிக விலைக்கே விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் இன்று அட்சய திருதியை என்பதால் மக்கள் தங்கம் வாங்கி வீட்டில் வைத்தால் தங்கம் அதிகரிக்கும் என தங்கம் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்நிலையில் இன்று காலையே தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்தது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.53,250க்கு விற்பனையாகி வந்தது. இந்நிலையில் சில மணி நேரங்களுக்குள்ளாக மீண்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ.53,640க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரே நாளில் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.90 உயர்ந்து ரூ.6,705 க்கு விற்பனையாகி வருகிறது.

அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் விலை குறையும் என எதிர்பார்த்திருந்த மக்களுக்கு இந்த விலை உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்