மின்கட்டணம் திடீர் உயர்வா? தேர்தல் முடிந்தவுடன் தமிழக அரசு தரும் ஷாக்..!

Siva

வெள்ளி, 10 மே 2024 (07:46 IST)
தமிழ்நாட்டில் தேர்தல் முடிவடைந்த நிலையில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாகவும், ரூ.55 முதல் ரூ.1,130 வரை மின் கட்டணம் உயர வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளான நிலையில் தமிழ்நாடு மின்வாரியம் மற்றும் மின்பகிர்மான கழகம் இதுகுறித்த விளக்கத்தை அளித்துள்ளது
 
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகம் முக்கிய அறிவிப்பில் தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக பரவும் தகவல் முற்றிலும் போலியானது. மேலும் இணையதளத்தில் பரவி வரும் கட்டண உயர்வு விபரம் என்பது தமிழ்நடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய எண் 07ன்படி 9.9.2022ம் தேதியின் படியான கட்டண விகிதம். இது முற்றிலும் பழைய செய்தி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் மீண்டும் மின்கட்டணம் உயர்வு இல்லை என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது
 
இதன் மூலம் தமிழ்நாட்டில் மின் கட்டணம் புதிதாக உயர்த்தப்படவில்லை என்றும் ஏற்கனவே உதித்தப்பட்ட மின்கட்டணத்தை புதிதாக உயர்த்தப்பட்டது போல் சிலர் இணையதளங்களில் பதிவு செய்து வருகின்றனர் என்றும் மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. 
 
ஆனால் அதே நேரத்தில் எந்த நேரமும் மின் கட்டணம் உயர்த்தப்படும் வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் மத்தியில் ஒரு கருத்து நிலவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்