10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள்: தேதி அறிவிப்பு..!

Siva

வெள்ளி, 10 மே 2024 (08:09 IST)
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது என்பதும் தேர்வு எழுதிய மாணவர்களில் 94 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர் என்பதையும் பார்த்தோம். அதுமட்டுமின்றி குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான மறு தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது என்பதும் அதற்கான விண்ணப்பம் பூர்த்தி செய்யும் தேதியும் அறிவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து இன்று பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன என்பதும் இன்று காலை தேர்வு முடிவுகள் 9 மணிக்கு தேர்வு துறை இயக்குனர் இந்த முடிவை வெளியிட உள்ளார் என்பதும் இந்த முடிவை காண பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய லட்சக்கணக்கான மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஒருபுறம் சந்தோஷமாக இருக்கும் நிலையில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் வருத்தத்தில் இருப்பார்கள் என்ற நிலையில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

இன்று வெளியாகும் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மே 13ஆம் தேதி முதல் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்றும் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது

எனவே பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சியடையாத மாணவர்கள் தவறான முடிவு எடுக்காமல் இந்த சிறப்பு பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்