உக்ரைன் போர்; கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை! – மக்கள் அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 24 பிப்ரவரி 2022 (11:08 IST)
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதன் எதிரொலியாக தங்கம் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது.

உக்ரைன் எல்லையில் ராணுவத்தை குவித்து வந்த ரஷ்யா தற்போது அதிகாரப்பூர்வமாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது. உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்ய ராணுவம் குண்டு மழை பொழிந்து வரும் நிலையில், உக்ரைன் நகரங்களுக்கு ரஷ்ய ராணுவ வீரர்கள் நுழைந்துள்ளனர்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் தங்கம் விலை திடீரென விலை உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.864 உயர்ந்து ரூ.36,616க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் தங்க ரூ.4,827 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்