முதல்வர் ஸ்டாலின் கச்சத்தீவுக்கு செல்ல வேண்டும்: அப்போது தான் திமுகவின் நாடகம் தெரியும்: பாஜக

Mahendran

வெள்ளி, 17 அக்டோபர் 2025 (12:48 IST)
இலங்கை அதிபரிடம் கச்சத்தீவை மீட்க வலியுறுத்துமாறு பிரதமருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதிய விவகாரத்தில், தமிழக பாஜக துணைத் தலைவர் சக்கரவர்த்தி கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
 
இந்த கோரிக்கையை ஒரு 'நாடகம்' என்று விமர்சித்த சக்கரவர்த்தி, "முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியும், தி.மு.க. தலைவர் கருணாநிதியும் இணைந்துதான் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தனர். இந்த உண்மை எல்லோருக்கும் தெரியும்," என்று குற்றம் சாட்டினார்.
 
மேலும், முதல்வர் ஸ்டாலின் தனது அமைச்சர்களுடன் முதலில் கச்சத்தீவுக்கு நேரில் செல்ல வேண்டும் என்று சவால் விடுத்தார். அப்படி சென்றால், 'உங்கள் தந்தையால் கொடுக்கப்பட்ட தீவை இப்போது நீங்கள் வந்து கேட்பது நியாயமா?' என்று இலங்கை மக்கள் கேட்பார்கள். 
 
அப்போதுதான் இலங்கை விவகாரத்தில் திமுகவின் நாடகம் நாட்டு மக்களுக்கு வெளிச்சத்துக்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்