பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவியான ரிவாபா ஜடேஜா, குஜராத் மாநிலத்தின் அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்டு இன்று பதவியேற்று கொண்டார்.
குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, நேற்று அமைச்சரவையில் இருந்த 16 பேர் மொத்தமாக பதவி விலகினர்.
கடந்த 2022 டிசம்பர் 12 அன்று பூபேந்திர படேல் இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்றார். 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவையில் 27 பேர் வரை அமைச்சர்களாக பதவி வகிக்க முடியும். தற்போது விரிவாக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் 26 பேர் இடம்பெற்றுள்ளனர்.
அமைச்சரவை பொறுப்பில் புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த எதிர்பார்ப்பின்படி ரிவாபா ஜடேஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவரை தவிர்த்து புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளோரின் பட்டியல் இதோ: