அதிமுகவுடன் பேச்சுவார்த்தை தோல்வி.. அடுத்தகட்ட நடவடிக்கையில் ஜிகே வாசன் அதிரடி..!

Siva
வியாழன், 15 பிப்ரவரி 2024 (08:43 IST)
அதிமுகவை எப்படியாவது பாஜக கூட்டணிக்கு கொண்டுவர தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் தீவிர முயற்சி செய்த நிலையில் அதிமுக பிடிவாதமாக பாஜகவுடன் கூட்டணி இல்லை என உறுதிபட கூறிவிட்டது.

இதையடுத்து அடுத்த கட்டமாக பாஜக கூட்டணியில் ஜிகே வாசனின் தமாக இணைய இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளதாகவும் அதனை அடுத்து மேலும் சில நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

முதல் கட்டமாக பாட்டாளி மக்கள் கட்சியை பாஜக கூட்டணிக்கு கொண்டுவரும் முயற்சியை ஜிகே வாசன் எடுப்பார் என்றும் அதன் பிறகு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.

 பாஜக கூட்டணி சார்பில் அண்ணாமலை உள்பட ஒரு சில தலைவர்கள் பேசுவதை விட ஜிகே வாசன் பேசுவது பொருத்தமாக இருக்கும் என பாஜக மேலிடம் கருதுவதாகவும் அதனால் அரசியல் கட்சிகளை கூட்டணிக்கு கொண்டு வரும் பொறுப்பை ஜிகே வாசன் ஏற்று கொண்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜிகே வாசன் முயற்சியால் பாஜக கூட்டணிக்கு எத்தனை அரசியல் கட்சிகள் வரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Siva

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்