ஜெர்மனியில் திடீரென விமான நிலைய ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்ததால் சுமார் 3500 பயணிகள் அவதியில் உள்ளனர் என்றும், அதில் சிலர் இந்தியர்களும் இருப்பதாக கூறப்படுகிறது.
ஜெர்மனியில் விமான நிலைய ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் 300க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்படுவதிலும் தரை இறங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டது.
இந்த வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 35 ஆயிரம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உடனடியாக வேலை நிறுத்தத்தை நிறுத்த பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆறு சதவீதம் விலைவாசி அதிகரித்துள்ள நிலையில் விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கூடுதலாக சம்பளம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து திடீரென ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் விமான நிலைய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.