நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு...

J.Durai
சனி, 19 அக்டோபர் 2024 (17:13 IST)
நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட மேல் கூடலூர்  அடுத்து உள்ள  கோக்கால் மற்றும் (ஒன்னரை சென்ட்,)பகுதியில்  கடந்த 27.06.2024 மற்றும் 28.06.2024 அன்று பெய்த கனமழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது.  
 
இதைத்தொடர்ந்து கோக்கால் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் நில விரிசல்கள் ஏற்பட்டு 15-க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டது.  இதேபோல் அப்பகுதியில் உள்ள முதியோர் காப்பகத்தில் 
விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த 
இருந்த முதியோர்கள் 48 பேரை வேறு காப்பகங்களுக்கு மாற்றப்பட்டனர். 
 
7 வீடுகள்  மற்றும் 1 முதியோர் இல்லம் முற்றிலுமாக சேதமடைந்தது.
அங்கிருந்தவர்கள்  வாடகை வீடுகளில்
தஞ்சம் அடைந்துள்ளனர் .
 
இதனைத் தொடர்ந்து இன்று கோக்கால் பகுதி யில் பூமியில் ஏற்பட்டு வரும் நில விரிசலால் 7 வீடுகள் இடிந்து பூமிக்குள் புதைந்து வந்த நிலையில் அப்பகுதியில் முழுவதும் 
புவியியல்  மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் இந்திய  ஆராய்ச்சியாளர்கள் 6 பேர் கொண்ட  குழுவினர் 
கோக்கால் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள் 
முழுவதும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
 
இப்பணியானது தொடர்ந்து 8 தினங்கள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்