கடந்த சில நாட்களுக்கு முன், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இன்று அதிகாலை, சென்னையின் பல பகுதிகளில் கனமழை பெய்ததை அடுத்து, சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில், அதாவது திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் மிக கனமழைக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து, பொதுமக்கள் அவசியம் இருந்தால் மட்டும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்றும், இல்லை என்றால் பாதுகாப்பாக வீட்டிற்குள் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.