காயத்ரி விலகலுக்கு தமிழிசைதான் காரணமா ? – மீண்டும் வெடிக்கும் சர்ச்சை !

செவ்வாய், 7 மே 2019 (15:11 IST)
அரசியலில் இருந்து காயத்ரி ரகுராம் விலகியதற்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன்தான் காரணம் என பேச்சுகள் எழுந்துள்ளன.

முன்னாள் நடன இயக்குனர் ரகுராமின் மகளான காயத்ரி ரகுராம் சினிமாக்களில் நடிகையாகவும் நடன இயக்குனராகவும் பணிபுரிந்து வந்தாலும் பிக்பாஸ் ஷோவுக்குப் பின்னே அவரது புகழ் அதிகமானது. அவர் பாஜகவில் இணைந்தும்  அரசியலில் செயல்பட்டு வந்தார். தற்போது நடந்து வரும் மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸுக்கு எதிராகத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்துவந்தார்.

ஆனால் அவருக்கும் தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கும் இடையே தமிழக பாஜக வின் செயல்பாடு குறித்து கருத்து வேறுபாடுகள் எழுந்தன. இதைத் தொடர்ந்து இருவரும் ஊடகங்களில் மாற்றி மாற்றி குற்றம் சாட்டி வந்தனர். இது குறித்து தமிழிசை காயத்ரி பாஜகவில் உறுப்பினர் இல்லை என்று கூறினார். இந்நிலையில் இப்போது காயத்ரியின் விலகலுக்கும் தமிழிசைதான் காரணம் என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள காயத்ரி ரகுராம் ‘ஒரு இடைவெளி எடுத்துக்கொள்வது இவ்வளவு சலசலப்புகளை உருவாக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. தமிழிசை சவுந்தர்ராஜன் ஏற்கனவே நான் விலகி விட்டதாகக் கூறினார். அவருக்கு இடைவெளி என்பதன் அர்த்தம் என்னவென்று தெரியும் என நினைக்கிறேன். அதனால் என்னை அமைதியாக இருக்க விடுங்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்