கமலுக்கு எதிராக களம் இறங்கிய காயத்ரி ரகுராம்....

Webdunia
திங்கள், 6 நவம்பர் 2017 (11:44 IST)
நடிகர் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசத்திற்கு எதிராக நடிகையும், நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் ‘இந்து தீவிரவாதம் இல்லை என இனிமேல் கூற முடியாது’ என்ற கருத்தை தெரிவித்திருந்தார். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், பாஜகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் தனது டிவிட்டர் பக்கத்தில் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசத்திற்கு எதிராக பல கருத்துகளை தெரிவித்துள்ளார்.
 
நான் இந்து. ஆனால் தீவிரவாதி அல்ல. அந்த கருத்து என்னை மிகவும் பாதிக்கிறது. மத்திய அரசை குறை சொல்வது மட்டுமே அரசியலுக்கு வருவதற்கான வழி அல்ல. மக்கள் பணியில் ஈடுபட வேண்டும். அதை செய்யாமல் குறுக்கு வழியில் அரசியலுக்கு வர ஆசைப்படக்கூடாது. நீண்ட நாட்களுக்கு அது நிலைக்காது. ஊடகங்கள்தான் அனைத்தையும் பெரிதுபடுத்துகின்றன.


 

 
நிஜவாழக்கையில் அணிந்துள்ள முகமூடியை கழற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. மக்கள் முழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது. தன்னுடைய சொந்த நாட்டு மக்களின் நம்பிக்கையையும், மதத்தையும் தீவிரவாதத்தோடு ஒப்பிடக்கூடாது. அது எந்த மதமாக இருந்தாலும் சரி” என அவர் டிவிட் செய்துள்ளார்.
 
இதைக் கண்ட நெட்டிசன்கள் ‘நீங்கள் எந்த மக்கள் பணி செய்து விட்டு அரசியலுக்கு வந்தீர்கள்’ என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டில் காய்த்ரியின் பல தவறுகளை கமல்ஹாசன் வெளிப்படையாக சுட்டிக் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்