நான் பொறுக்கிதான் - சுப்பிரமணிய சுவாமிக்கு கமல்ஹாசன் பதிலடி

சனி, 4 நவம்பர் 2017 (13:42 IST)
பாஜக மூத்த தலைவர் சில மாதங்களுக்கு முன்பு தனது டிவிட்டர் பக்கத்தில் ‘தமிழ் பொறுக்கிகள்’ என்ற வார்த்தையை தொடர்து பயன்படுத்தி வந்தார்.


 

 
மேலும், கமல்ஹாசன் கூறிய பல கருத்துகளுக்கு எதிராக அவர் கருத்து தெரிவித்திருந்தார். 
இந்நிலையில், இன்று சென்னை அடையாற்றில் நடந்த விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
 
எஜமானர்களாக இருக்க வேண்டிய நீங்கள் சேவகர்கள் ஆகிவிட்டீர்கள். எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என சொல்லி கொடுத்ததை மறந்துவிட்டீர்கள். இது உங்கள் தவறு. உங்களுக்கு ஆறுதல் சொல்ல நான் வரவில்லை. இது என் கடமை. 
 
என் பின்னால் இருக்கும் பலரை உங்களிடத்தில் அனுப்புகிறேன். அவர்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள். குளம், ஏரி, ஆறு போன்றவற்றை கடவுளாக கும்பிடுங்கள். ஒரு பகுத்தறிவாளனாக இருந்தும், நான் இப்படி கூறுகிறேன் எனில் இதை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள்..
 
அரசு எல்லோருக்கும் உத்தரவு மட்டுமே இடுகிறது. இறங்கி வேலை செய்வதில்லை. எனவே, நாமே களத்தில் இறங்குவோம். அதற்கு நானும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன். நீங்கள் உருவாக்கிய அரிசியை சாப்பிடுவதற்கு நான் செய்யும் அதுவே நன்றிக்கடன். 
 
டெல்லியில் இருந்து கொண்டு ஒருவர் எல்லோரையும் தமிழ் பொறுக்கி என்கிறார். நான் பொறுக்கிதான். அறிவு எங்கு இருந்தாலும் அதை நான் பொறுக்குவேன்” என கமல்ஹாசன் பதிலடி கொடுத்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்