கமல்ஹாசனை சுட்டுக்கொல்ல வேண்டும் - ஹிந்து மகாசபா ஆணவ பேச்சு

சனி, 4 நவம்பர் 2017 (13:07 IST)
நடிகர் கமல்ஹாசன் மற்றும் அவரை போன்றவர்களை சுட்டுக் கொல்ல வேண்டும் அல்லது தூக்கில் போட வேண்டும் என அகில் பாரதீய ஹிந்து மகாசபாவின் தேசிய தலைவர் பண்டிட் அசோக் சர்மா சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார்.


 

 
நடிகர் கமல்ஹாசன் ஆனந்தவிகடன் இதழில் எழுதி வரும் 'என்னுள் மையம் கொண்ட புயல்' என்னும் தொடரில், 'இனிமேலும் இந்து தீவிரவாதிகள் இல்லை என்று கூற முடியாது என்ற கருத்தை பதிவு செய்திருந்தார். இதற்கு ஹெச்.ராஜா உட்பல பல பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 
மேலும், கமல்ஹாசன் மீது உத்திரபிரதேசத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

 
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்த ஹிந்து மகாசபா தலைவர் அசோக் சர்மா “ இந்துக்களின் நம்பிக்கையை குறித்து தவறான கருத்துகளை கூறும் நபர் யாராக இருந்தாலும், அவர்களுக்கு இந்த புனித பூமியில் வாழும் உரிமை கிடையாது. அப்படி பேசியதற்காக மரணத்தை பரிசாக பெற வேண்டும். கமல்ஹாசன் மற்றும் அவரை போன்றவர்களை சுட்டுக்கொல்ல வேண்டும் அல்லது தூக்கிலிடவேண்டும். அதுதான் அவர்களுக்கு கற்றுத்தரும் பாடம்” என அவர் தெரிவித்துள்ளார்.
 
இதையடுத்து, கமல்ஹாசன் கூறியது சரிதான். இதைத்தான், அசோக் சர்மாவின் பேச்சு நிரூபித்துள்ளது. இதுதான் ஹிந்து தீவிரவாதம் என பலரும் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்