ஈரோட்டுல என்னோட மோதி ஜெயிக்க தயாரா? – அண்ணாமலைக்கு காயத்ரி ரகுராம் சவால்!

Webdunia
புதன், 18 ஜனவரி 2023 (10:14 IST)
சமீபத்தில் பாஜகவிலிருந்து விலகிய காயத்ரி ரகுராம் தேர்தலில் போட்டியிட அண்ணாமலைக்கு சவால் விடுத்துள்ளார்.

சமீபமாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையுடன் அக்கட்சியை சேர்ந்த பிரபல நடிகை காயத்ரி ரகுராமுக்கு கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தது. அண்ணாமலை திட்டமிட்டு தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவும், பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் கூறி வந்த காயத்ரி ரகுராம் கட்சியை விட்டு விலகினார்.

இந்நிலையில் அண்ணாமலை குறித்து காயத்ரி ரகுராம் தொடர்ந்து விமர்சனங்களை வைத்து வருகிறார். தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “அண்ணாமலைக்கு இப்போது என்னுடன் பேசத் தைரியம் இல்லை, ராஜினாமா செய்த அடி ஆளை அனுப்புகிறார். ஈரோடு இடைத்தேர்தலில் எனக்கு எதிராக அவர் போட்டியிட முடியுமா அல்லது முடியாதா என்று கேளு. இது ஆம் அல்லது இல்லை என்ற கேள்வி. விவாதிக்க எதுவும் இல்லை” என்று நேரடியாக சவால் விடுத்துள்ளார்.

தொடர்ந்து அண்ணாமலை – காயத்ரி ரகுராம் இடையேயான இந்த மோதல் பாஜக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்