சமையல் எரிவாயு விலை குறைவு! - மக்கள் நிம்மதி!

Webdunia
வெள்ளி, 1 மே 2020 (15:16 IST)
நீண்ட காலமாக விலை உயர்ந்த கேஸ் சிலிண்டர் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சரிவை சந்தித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பொருளாதாரத்தில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டதால் கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவை சந்தித்துள்ளது. இதனால் கடந்த சில மாதங்களில் கேஸ் சிலிண்டர் விலையும் குறைந்துள்ளது. மாதாமாதம் நிர்ணயிக்கப்படும் கேஸ் சிலிண்டரின் விலையானது இந்த மாதம் ரூ.192 வரை குறைந்துள்ளது. தற்போதைய விலை நிர்ணயப்படி டெல்லியில் சிலிண்டர் விலை ரூ. 162 குறைந்து ரூ.580க்கும், கொல்கத்தாவில் ரூ.190 விலை குறைந்து ரூ.584 ஆகவும், சென்னையில் ரூ.192 விலை குறைந்து ரூ.569க்கும் கேஸ் சிலிண்டர்கள் விற்பனையாகின்றன.

கடந்த சில மாதங்களில் குறைந்ததை விடவும் மிகவும் அதிகமான வீழ்ச்சியை கேஸ் சிலிண்டர்கள் சந்தித்திருப்பதாக கூறப்படுகிறது. நீண்ட காலம் கழித்து கேஸ் விலை மிகவும் குறைந்துள்ளது மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்