கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் மே 3 வரை தளர்வுகளற்ற ஊரடங்கு தொடர்ந்து வருகிறது. இன்று முதல் மே மாதம் தொடங்குவதால் வழக்கமாக இந்த சமயங்கள் கோடை காலத்தையொட்டி சுற்றுலா பயணிகள் அதிகமான சுற்றுலா தளங்களுக்கு செல்வர். முக்கியமாக ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா பகுதிகளில் மக்கள் அதிகமாக கூடுவர்.
இதனால் கொடைக்கானலில் ஆண்டுதோறும் மே மாத தொடக்கத்தில் கோடை விழா கொண்டாடப்படும். அதையொட்டி மலர் கண்காட்சி, படகு போட்டி போன்ற பல நிகழ்ச்சிகளும் நடைபெறும். தற்போது கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதையும், ஊரடங்கையும் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு கோடை விழா மற்றும் அதன் அனைத்து கொண்டாட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக திண்டுக்கல் ஆட்சியர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.