சேலத்தில் வௌவால் கறியை சிக்கன் என விற்று வந்த கும்பலை வனத்துறை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசைவ உணவுகள் மீது மக்களுக்கு பிரியம் அதிகரித்துள்ள நிலையில் ஊர்தோறும் ஆங்காங்கே சாலை ஓரங்களில் அசைவக் கடைகள் அதிகரித்து வருகின்றன. விலை குறைவாக கிடைப்பதால் மக்கள் பலரும் அங்கு கிடைக்கும் அசைவ உணவுகளை அதிகம் வாங்கும் நிலையில் அதில் நடக்கும் கலப்படம் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளது.
பெரும்பாலும் மக்கள் கோழி, ஆடு கறி என நம்பி உண்ணும் உணவுகளில் பூனைக்கறி உள்ளிட்டவற்றை கலப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் சேலத்தில் நடந்த ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள டேனிஷ்பேட்டை வனப்பகுதியில் இருவர் சட்டவிரோதமாக பழந்தின்னி வௌவ்வால்களை சுட்டு வேட்டையாடி வந்துள்ளனர். சமீபத்தில் அவர்கள் வனத்துறையினரிடம் பிடிபட்டுள்ளனர். அவர்களிடம் வௌவ்வால் வேட்டை குறித்து விசாரித்ததில் வேட்டையாடிய வௌவ்வால்களை வறுத்து சில்லி சிக்கன் என விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது. இந்த செய்தி சேலம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Edit by Prasanth.K