அமெரிக்காவில் பயணிகள் விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஒருவர் எழுந்து "அமெரிக்காவை அழிப்பேன், ட்ரம்பை கொல்வேன், அல்லாஹு அக்பர்" என்று கோஷமிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பயணி கழிப்பறையிலிருந்து வெளியே வந்தவுடன் முதலில் "அல்லாஹு அக்பர்" என்று கத்தினார். பிறகு, "என்னிடம் வெடிகுண்டு இருக்கிறது, அமெரிக்க அதிபரைக் கொல்வேன், அமெரிக்காவை அழிப்பேன்" என்று அவர் மிரட்டியுள்ளார்.
பயணியின் அத்துமீறிய நடத்தை காரணமாக விமானி உடனடியாக விமானத்தை அவசரமாக தரையிறக்கினார். விமானம் தரையிறங்கியவுடன் அந்த நபர் கைது செய்யப்பட்டதாகவும், அவரிடம் தற்போது தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் அமெரிக்க விமான பயணிகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.